top of page

INFO

விஜய் (பிறப்பு: ஜூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள்.

திரைப்படத்துறை:

விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தற்பொழுது, விஜய்க்காக தளமதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள் .எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2012 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.

 

வேறு துறை:

இவர் விளம்பர‌ப் படங்களிலும் நடிக்கிறார். 2002ல் கொக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் இவர் கேட்ரீனா கய்ஃப் உடன் தோன்றினார்.ஆகஸ்ட் 2010 முதல் ஜோஸ் அலுக்காஸ் நகைக் கடையின் விளம்பரப் படங்களில் தோன்றி வருகின்றார்.2011 ல் டாடா டோகோமா நகர்பேசி விளம்பரப்படத்தில் நடித்தார்.

அரசியல்:

2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்

  • காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது
  • திருபாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது)

விஜய் தொலைக்காட்சி

விருது திரைப்படங்கள் ஆண்டு மூலம்
நாளைய சூப்பர் ஸ்டார் திருப்பாச்சி, சிவகாசி 2006  
இந்த ஆண்டின் கேளிக்கையாளர் போக்கிரி, அழகிய தமிழ் மகன் 2007  
விருப்பமான நாயகன் வேட்டைக்காரன் 2009  
இந்த ஆண்டின் கேளிக்கையாளர் நண்பன்,துப்பாக்கி 2012  
விருப்பமான நாயகன் துப்பாக்கி 2012  

பிற விருதுகள்

  • கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது
  • கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது
  • கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது
  • பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது
  • போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது
  • போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது
  • வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
  • துப்பாக்கி, நண்பன்(2012) - விகடன் சிறந்த நடிகர் விருது

 

 

 

 

bottom of page